
நீடாமங்கலம்: நீடாமங்கலம் சந்தனராமர் கோயிலில் வெண்ணைத்தாழி விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இக்கோயிலில் ஸ்ரீராம நவமி பெருவிழா கடந்த 15 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. எட்டாம் நாள் விழாவான வெண்ணைத்தாழி விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதனை முன்னிட்டு காலையில் சந்தானராமருக்கு சிறப்பு ஆராதனைகள் நடந்தது.
இதனைத் தொடர்ந்து, ஸ்ரீராமர் நவநீதசேவையாக வெண்ணைத்தாழி பல்லக்கில் எழுந்தருளி நகரின் அனைத்து வீதிகளிலும் வலம் வந்ததார்.
திரளான பக்தர்கள் வெண்ணை வழங்கி ராமரை தரிசனம் செய்தனர். குதிரை வாகனத்தில் ராஜ அலங்காரத்தில் சந்தானராமர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்புரிந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.