உதகை மலர் காட்சி மே 10 இல் தொடங்குகிறது: ஆட்சியர்

உதகை 126 ஆவது மலர் கண்காட்சி வரும் மே 10 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது
உதகை மலர் காட்சி மே 10 இல் தொடங்குகிறது: ஆட்சியர்

உதகை 126 ஆவது மலர் கண்காட்சி வரும் மே 10 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் கோடை விழா நடைபெறும். இந்த விழாவின் முக்கிய நிகழ்வுகளாக காய்கறி கண்காட்சி, வாசனை திரவிய கண்காட்சி, ரோஜா கண்காட்சி, மலர் கண்காட்சி, பழக் கண்காட்சி என விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

உதகை மலர் காட்சி மே 10 இல் தொடங்குகிறது: ஆட்சியர்
கோடைக்கால பயிற்சி வகுப்புக்கு கட்டணம்- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

இதனைக் காண பல்வேறு பகுதிகளிலிருந்து பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் கோடை விழாவையொட்டி, 126-வது மலர் கண்காட்சி உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மே 17 ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தேதி மாற்றம் செய்யப்பட்டு முன்கூட்டியே மே 10 முதல் மே 20 ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com