உ.பி.யில் டபுள் டெக்கர் பேருந்து - கார் மோதி விபத்து: 7 பேர் பலி

ஆக்ரா-லக்னெள விரைவுச் சாலையில் விபத்து.
டபுள் டெக்கர் பேருந்து - கார் மோதி விபத்து.
டபுள் டெக்கர் பேருந்து - கார் மோதி விபத்து.
Published on
Updated on
1 min read

உத்தரப் பிரதேசத்தில் ஈரடுக்கு பேருந்தும், காரும் மோதிக்கொண்ட விபத்தில் 7 பேர் பலியாகியுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து காவல் கண்காணிப்பாளர் சஞ்சய் குமார் வர்மா கூறுகையில்,"ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12:30 மணியளவில் ரேபரேலியில் இருந்து தில்லி நோக்கிச் சென்ற ஈரடுக்கு பேருந்து கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.

லக்னெள நோக்கிச் சென்ற கார் மீது ஈரடுக்கு பேருந்து மோதியதில், பேருந்தில் இருந்த 20-25 பேர் காயமடைந்தனர். அவர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

டபுள் டெக்கர் பேருந்து - கார் மோதி விபத்து.
வயநாடு நிலச்சரிவு: 6-வது நாளாக தொடரும் மீட்புப் பணி!

லக்னெள-ஆக்ரா விரைவுச் சாலையில் நடந்த இந்த விபத்தில் காரில் இருந்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், பேருந்தில் பயணம் செய்த 4 பேர் பலியாகினர். கார் ஓட்டுநர் தூங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிறந்த சிகிச்சையை வழங்குவதை அரசாங்கம் உறுதி செய்துள்ளது. பேருந்தில் பயணம் மேற்கொண்ட மக்கள் அனைவரும் தங்களது இடங்களுக்கு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com