நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

பிகாரில் டி.ஜே. வாகனம் உயர் மின்னழுத்த கம்பியில் உரசியதில் 9 பேர் பலி

பிகாரில் டி.ஜே. வாகனம் உயர் மின்னழுத்த கம்பியில் உரசியதில் 9 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News image

சம்பவ இடத்தில் மீட்புப்பணியில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள்.

Updated On :5 ஆகஸ்ட் 2024, 1:02 pm IST

பிகாரில் டி.ஜே. வாகனம் உயர் மின்னழுத்த கம்பியில் உரசியதில் 9 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிகார் மாநிலம், சுல்தான்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கன்வார் யாத்திரையின் போது டி.ஜே. வாகனத்தில் பக்தி பாடல்களை ஒலித்தபடி ஞாயிற்றுக்கிழமை இரவு சோனேபுரில் உள்ள பாபா ஹரிஹர்நாத் கோயிலுக்கு சென்றுசொண்டிருந்தனர்.

அப்போது அந்த டி.ஜே.வாகனம் உயர் மின்னழுத்த கம்பியின் மீது உரசியது. இந்த சம்பவத்தில் டி.ஜே.வாகனத்தில் அமர்ந்திருந்த 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மற்றொருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் ஹாஜிபுர் சதர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதற்கிடையில், காயமடைந்த மேலும் நான்கு பேர் உள்ளூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக ஹாஜிபுர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.