சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

ஆறாவது முறையாக நிரம்பிய ஆழியாறு அணை!

அணையின் பாதுகாப்பு கருதி 11 மதகுகள் வழியாக வினாடிக்கு 1,347 கன அடி உபரி நீர் ஆற்றில் வெளியேற்றப்பட்டுள்ளதை அடுத்து கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image

ஆழியாறு அணையின் பாதுகாப்பு கருதி 11 மதகுகள் வழியாக வினாடிக்கு 1,347 கன அடி உபரி நீர் ஆற்றில் வெளியேற்றப்பட்டுள்ளது.

Updated On :8 ஆகஸ்ட் 2024, 9:57 am IST

கோவை: பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு அணை ஆறாவது முறையாக நிரம்பியது. அணையின் பாதுகாப்பு கருதி 11 மதகுகள் வழியாக வினாடிக்கு 1,347 கன அடி உபரி நீர் ஆற்றில் வெளியேற்றப்பட்டுள்ளதை அடுத்து கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் சோலையார், ஆழியாறு, பரம்பிக்குளம் ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வந்தது.

இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக மழையின் அளவு குறைந்த போதிலும் நீர்ப்பிடிப்புப் பகுதியில் இருந்து வரும் நீர்வரத்து அதிகரித்ததால் ஆழியாறு அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியில் 119.50 அடியை எட்டியது. இதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை காலை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,225 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், அணையின் பாதுகாப்பு நலன் கருதி 11 மதகுகள் வழியாக வினாடிக்கு 1,347 கன அடி உபரி நீர் ஆழியாறு ஆற்றில் திறந்து விடப்பட்டது.

தண்ணீர் திறந்து விடுவதற்கு முன்பாக பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கும் வகையில் அபாய ஒலி எழுப்பப்பட்டது.

அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் ஆற்றின் கரையோர பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.