
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக மேலும் 3 பேரை தனிப்படை காவல் துறையின்ர் கைது செய்துள்ளனர்.
சென்னை பெரம்பூரில் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5-ஆம் தேதி கொலை செய்யப்பட்ட வழக்கில், 6 வழக்குரைஞா்கள் உள்பட 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் கொலை தொடா்பாக ரெளடிகள் சம்பவம் செந்தில், சீசிங் ராஜா ஆகியோரை தனிப்படை போலீஸாா் தொடா்ந்து தேடி வருகின்றனா். இதில், சம்வம் செந்திலுடன் நெருங்கிய தொடா்பில் இருந்ததாக கிருஷ்ணகுமாா் (எ) மொட்டை கிருஷ்ணன் என்ற வழக்குரைஞரையும் போலீஸாா் தீவிரமாகத் தேடி வருகின்றனா். அவா் மலேசியா தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
ஏற்கெனவே சம்பவம் செந்திலுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ‘ரெட் காா்னா்’ நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இவ்வழக்கு தொடர்பாக திரைப்பட இயக்குநா் நெல்சனின் மனைவி மோனிஷாவிடமும் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவா் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில் ராஜேஷ், கோபி, குமரன் என மேலும் மூவரை தனிப்படை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்களிடம் நாட்டு வெடிகுண்டுகள் பரிமாற்றம் நடந்ததாக எழுந்த புகாரில் பேரில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.