/

தங்கம் விலை மீண்டும் உயர்வு: இன்றைய விலை நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ. 280 உயா்ந்து ரூ. 53,560-க்கு விற்பனையாகிறது.

News image
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ. 280 உயா்ந்தது.
Updated On :24 ஆகஸ்ட் 2024, 5:11 am

DIN

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ. 280 உயா்ந்து ரூ. 53,560-க்கு விற்பனையாகிறது.

கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில், வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.240 குறைந்து ரூ.53,440-க்கு விற்பனையானது.

வெள்ளிக்கிழமை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ. 6,660-க்கும் , பவுனுக்கு ரூ. 160 குறைந்து ரூ. 53,280-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், சென்னையில் தங்கத்தின் விலை மீண்டு உயர்ந்துள்ளது. அதன்படி, சனிக்கிழமை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.6695-க்கும், பவுனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.53,560-க்கும் விற்பனையாகிறது.

அதேபோல், வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.1.30 உயர்ந்து ரூ.88-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1,300 உயர்ந்து ரூ. 88,000-க்கும் விற்பனையாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.