அண்ணாமலையை பார்த்து பயப்படும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள்: பாஜக

மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, தமிழக அரசியலில் காலடி எடுத்து வைத்த உடன் மிகவும் பயந்தது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான்.
annamalai
தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலைDIN
Published on
Updated on
1 min read

அண்ணாமலையை பார்த்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள்: பயப்படுகிறார்கள் என்று பாஜக மாநிலத் துணைத் தலைவர் கரு.நாகராஜன் விமர்சித்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் கரு.நாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, தமிழக அரசியலில் காலடி எடுத்து வைத்த உடன் மிகவும் பயந்தது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான். அவரது வளர்ச்சியைப் பார்த்து பொறாமைப்பட்டார்கள். அவ்வப்போது அவரை குறை சொல்லி பேசுவதும் விமர்சிப்பதும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் அமைச்சர்களுக்கும் இன்றைய நிர்வாகிகளுக்கும் பொழுதுபோக்காக இருந்தது.

பாஜக-அண்ணா திமுக கூட்டணி இருக்குமா இல்லையா என்பதை ஒருபோதும் பாஜக பேசாத போதும், ஏதோ பாஜக அதிமுக தான் எங்களுக்கு வேண்டும் என்று அழுது அடம் பிடித்ததைப் போல இவர்களே கதவுகளை மூடி விட்டோம், ஜன்னல்களை மூடிவிட்டோம், நாங்கள் பிஜேபியை விட்டு ஓடி விட்டோம் என்று கதை அளந்து கொண்டிருந்தார்கள்.

கடந்த உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு சாதனை படைத்த அண்ணாமலை, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை தலைமை ஏற்று அமைத்து தமிழகத்தில் ஒரு சாதனை படைத்து விட்டார். கூட்டணி கட்சிகளோடு சேர்த்து 80 லட்சம் வாக்குகளும், பாஜகவிற்கு மட்டும் 50 லட்சம் வாக்குகளும் கிடைத்தது. ஏறத்தாழ 7300 பூத்துகளில் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் திமுகவை பின்னுக்கு தள்ளி முதலிடம் பெற்றார்கள், 12 நாடாளுமன்றத் தொகுதிகளில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடம் பிடித்தார்கள்.

annamalai
ஜம்மு காஷ்மீர் தேர்தல்: காங்கிரஸ் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

பல்வேறு தொகுதிகளில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களுக்கு டெபாசிட் பறிபோனதை நாம் பார்த்தோம்.

இவையெல்லாம் தமிழக பாஜக எந்த அளவிற்கு வளர்ந்து இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது. இவற்றையெல்லாம் உற்று நோக்கிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் தொடர்ந்து மாநில தலைவர் அண்ணாமலையை, விமர்சிப்பதை ஒரு வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.

ஏதாவது ஒரு பத்திரிகையாளர் ஒரு கேள்வி கேட்டால் அதற்கு தவறான தகவலை முரண்பட்ட தகவலை அவருடைய புகழுக்கு களங்கம் விளைவிக்கக்கூடிய தகவலை தொடர்ந்து பேசி வந்தார்கள். இவற்றிற்கெல்லாம் பதில் சொல்லாமல் வேடிக்கை பார்க்கக்கூடிய நிலையில் எங்கள் கட்சியில்லை என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com