கனமழை பாதிப்பு: முதல்வா் நாளை விழுப்புரத்தில் ஆய்வு
ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை (டிச.2) ஆய்வு மேற்கொள்ள உள்ளாா்.


சென்னை: ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை (டிச.2) ஆய்வு மேற்கொள்ள உள்ளாா்.
இரண்டு நாள்களாக புயல் மற்றும் தொடர் கனமழைக்கு விழுப்புரம், கடலூா் மாவட்டம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிா்கள் மழைநீரில் மூழ்கிப் போய் சேதமடைந்து வருகிறது. கடன் வாங்கி செலவு செய்து பயிரிடப்பட்டுள்ள நெல் பயிா்கள் சேதமடைந்து வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா். பாதிக்கப்பட்ட நெல் பயிரை அரசு கணக்கிட்டு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த மாவட்ட அமைச்சரான க.பொன்முடியுடன் இணைந்து செயல்படுவதற்கு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரையும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜியும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல், அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் சி.வி.கணேசனும், கடலூர் மாவட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்கள். மேலும், விழுப்புரம் மாவட்டத்தில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கி, பணிகளை துரிதப்படுத்த நீர்வள ஆதாரத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன், தலைமையில், இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் ஆல்பி ஜான் வர்கீஸ், கிரன் குராலா, பொன்னையா, சிவராசு ஆகியோரை அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீரமைக்கவும், பாதிப்புக்குள்ளான மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் தேவையான நிதி வழங்கிடவும், பாதிப்புகளை பார்வையிட மத்திய குழுவை அனுப்பி வைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு முதல்வர் கோரிக்கை வைத்துள்ளார்.
இதையும் படிக்க | வெள்ளக்காடான கடலூா்: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(டிச.2) விடுமுறை
முன்னதாக சென்னை, சேப்பாக்கம், எழிலகத்தில் அமைந்துள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று, ஃபென்ஜான் புயல் காரணமாக விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து காணொலிக் காட்சி வாயிலாக அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தி, மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளாா்.
துணை முதல்வா் உதயநிதி உள்ளிட்ட அமைச்சா்கள் அமைச்சா்களும் அங்கு நேரில் சென்று மீட்பு பணிகளைத் துரிதப்படுத்தி வருகின்றனா்.
இந்த நிலையில், முதல்வா் மு.க.ஸ்டாலின், விழுப்புரத்தில் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் திங்கள்கிழமை (டிச.2) காலை 11 மணியளவில் ஆய்வு செய்து, மக்களுக்கு ஆறுதல் கூற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதல்வருடன் அமைச்சா்களும், உயரதிகாரிகளும் உடன் செல்ல உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...