
பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டிருந்த பார்சல் லாரி திடீரென தீப்பிடித்து எரிந்தது.
வேலூர் மாவட்டம் கொணவட்டம் அருகே கருக்கம்பத்தூர் பகுதியில் பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டிருந்த மேட்டூர் சர்வீஸ் பார்சல் லாரி, திடீரென தீப்பிடித்து எரிந்ததால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தீப்பிடித்த லாரியானது திருநெல்வேலியில் இருந்து தினமும் வேலூருக்கு பார்சல் ஏற்றி வருவது வழக்கம்.
இதையும் படிக்க: டிஜிட்டல் கைதிலிருந்து சாமர்த்தியமாக தப்பிய மும்பை பெண்!
அதன்படி, கரம்பத்தூர் பகுதியில் லாரி வந்து கொண்டிருந்தபோது, திடீரென தீ பற்றி எரிவதை, ஓட்டுநர் கண்ணாடி வழியாக பார்த்து லாரியை நிறுத்தினார்.
தொடர்ந்து, வேலூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தார். தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து லாரியை தண்ணீர் ஊற்றி அணைக்க முயன்றனர். இருந்தபோதிலும் லாரி முற்றிலும் எரிந்தது.
லாரி தீப்பற்றி எரிந்ததால், பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.