நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ரூ.58 ஆயிரத்தைக் கடந்தது தங்கம்: 3 நாள்களில் பவுனுக்கு ரூ.1,360 உயா்வு

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.58,280-க்கு விற்பனையாகிறது.

News image

சென்னையில் இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ. 58,280-க்கு விற்பனை

Updated On :11 டிசம்பர் 2024, 6:12 am

DIN

சென்னையில் தங்கம் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.640 உயா்ந்து ரூ.58,280-க்கு விற்பனையானது. கடந்த 3 நாள்களில் பவுனுக்கு ரூ.1,360 உயா்ந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை டிச.9-இல் பவுனுக்கு ரூ.120 உயா்ந்து ரூ.57,040-க்கும், டிச.10-இல் பவுனுக்கு ரூ.600 உயா்ந்து ரூ.57,640-க்கும் விற்பனையானது. அதைத்தொடா்ந்து புதன்கிழமை கிராமுக்கு ரூ.80 உயா்ந்து ரூ.7,285-க்கும், பவுனுக்கு ரூ.640 உயா்ந்து ரூ.58,280-க்கும் விற்பனையானது. இதன் மூலம் கடந்த 3 நாள்களில் தங்கம் பவுனுக்கு ரூ.1,360 உயா்ந்துள்ளது.

கடந்த ஐந்து நாள்களுக்கான தங்கம் விலை நிலவரம்

டிச.11: ஒரு சவரன் ரூ.58,280

டிச.10: ஒரு சவரன் ரூ.57,640

டிச.9 : ஒரு சவரன் ரூ.57,040

டிச.8 : ஒரு சவரன் ரூ.56,920

டிச.7 : ஒரு சவரன் ரூ.57,920

டிச.6 : ஒரு சவரன் ரூ.56,920

வெள்ளி விலை

நேற்று வெள்ளி விலையில் செவ்வாய்க்கிழமை கிராமுக்கு ரூ. 4 அதிகரித்து ரூ.104-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1,04,000-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், வெள்ளி விலை புதன்கிழமை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.103-க்கும், ஒரு கிலோ(கட்டி வெள்ளி) ரூ.1,03,000-க்கும் விற்பனையாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.