பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

பூண்டி ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேற்றம்: கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திருவள்ளூர் பகுதியில் பெய்து வரும் கனமழையால் பூண்டி நீர்த்தேக்கத்திற்கு வரத்து நீர் அதிகரித்துள்ளதால், கரையோர கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

News image

பூண்டி ஏரியிலிருந்து 1000 கன அடி உபரி நீர் கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.

Updated On :12 டிசம்பர் 2024, 7:53 am

DIN

திருவள்ளூர் பகுதியில் பெய்து வரும் கனமழையால் பூண்டி நீர்த்தேக்கத்திற்கு வரத்து நீர் அதிகரித்துள்ளதால், பிற்பகல் 1.30 மணிக்கு வினாடிக்கு 1,000 கன அடி உபரிநீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளதால் கரையோர கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்பாக இருக்கும் வகையில் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் அருகே பூண்டியில் அமைந்துள்ளது சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கம் சென்னை பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர்த்தேக்கங்களில் ஒன்றாகும். இந்த நீர்த்தேக்கத்தின் உயரம் 35 அடியும், 3231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டதாகும். தற்போது நீர் இருப்பு 34.05 அடியாகவும், கொள்ளளவு 2,839 மில்லியந் கனஅடியாக உள்ளது.

இந்த நிலையில் பூண்டி நீர்த்தேக்கத்திற்கான நீர்ப்பிடிப்புப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் நீர்வரத்து தொடர்ந்து உயர்ந்து வருவதாலும் சத்தியமூர்த்தி சாகர் நீக்த்தேக்கத்தின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் அணைக்கு வரும் நீர்வரத்து 35 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதால் அணையின் வெள்ளநீர் வழிகாட்டுதலின்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்த்தேக்கத்திர்கு வரும் உபரி நீரை ஆணையின் பாதுகாப்பு கருதி நீர்த்தேக்கத்தில் இருந்து வியாழக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் வினாடிக்கு 1000 கன்டி உபநீர் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

நீர்த்தேக்கத்திற்கு வரக்கூடி நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் கூடுதல் உபரி நீர் படிப்படியாக திறக்கப்படும் என முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுகிறது.

இதனால் நீர்தேக்கத்திலிருந்து வெளியேறிச் செல்லும் கொசஸ்தலை ஆறு செல்லும் வழித்தடங்களில் இருபுறமும் உள்ள கிராமங்களான நம்பாக்கம், கிருஷ்ணாபுரம், ஆட்ரம்பாக்கம், ஒதப்பை, நெய்வேலி, எறையூர், பீமன்தோப்பு, கொரக்கதண்டலம், சோமதேவன்பட்டு, மெய்யூர், வெள்ளியூர், தாமரைப்பாக்கம், திருக்கண்டலம், ஆத்தூர், பண்டிக்காவனூர், ஜெகநாதபுரம், புதுக்குப்பம், கன்னிப்பாளையம், வன்னிப்பாக்கம், அருவன்பாளையம், சீமாவரம், வெள்ளிவாயல்சாவடி, நாப்பாளையம், இடையன்சாவடி, மணலி, மணலி புதுநகர் சடையான்குப்பம், எண்ணூர் வழியாக கடலில் சென்று கலக்கிறது.

எனவே கொசஸ்தலை ஆற்றின் இருபுறமும் உள்ள தாழ்வான பகுதியில் வசித்து வரும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும் வகையில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.