
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(டிச. 13) சவரனுக்கு ரூ. 440 குறைந்து ரூ. 57,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை டிச.9-இல் சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.57,040-க்கும், டிச.10-இல் சவரனுக்கு ரூ.600 உயா்ந்து ரூ.57,640-க்கும், டிச.11-இல் சவரனுக்கு ரூ.640 உயா்ந்து ரூ.58,280-க்கும் விற்பனையானது.
இதனைத் தொடா்ந்து, வியாழக்கிழமை தங்கம் விலை மாற்றம் இல்லாமல் புதன்கிழமை விலையிலேயே விற்பனையானது.
இதையும் படிக்க: கனமழை: சுவாமிமலை கோவில் தேரோட்டம் ரத்து
இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(டிச. 13) சவரனுக்கு ரூ. 440 குறைந்து ரூ. 57,840-க்கும், கிராமுக்கு ரூ. 55 குறைந்து ரூ. 7,230-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.3 குறைந்து ரூ.101-க்கும், ஒரு கிலோ(கட்டி வெள்ளி) ரூ.1,01,000-க்கும் விற்பனையாகிறது.