அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யும்!
அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல்.


சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்துக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த இரு தினங்களில் வலுப்பெற்று தமிழக கடலோரப் பகுதியை நோக்கி மேற்கு-வடமேற்கு திசையில் நகரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இதனால், வடகடலோர தமிழகத்தில் அநேக இடங்களில், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று(டிச. 18) அடுத்த 3 மணி நேரத்துக்கு (இரவு 7 மணி வரை) சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூா், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மிதமான மழையும்
ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...