பூடான் நாட்டில் இந்திய கல்வியாளர் அருண் கபூருக்கு அந்நாட்டு அரசினால் ராஜ மரியாதை அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, பூடான் மற்றும் ஒமன் ஆகிய நாடுகளில் கல்வி நிலையங்களை நிறுவிய இந்தியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற கல்வியாளரான அருண் கபூருக்கு, பூடான் அரசினால் ராஜ மரியாதை அளிக்கப்பட்டுள்ளது.
பூடான் நாட்டின் 117 ஆவது தேசிய நாளை முன்னிட்டு திம்பூ சங்லிமிதங் ஸ்டேடியத்தில் நடைபெற்ற கொண்டாட்ட நிகழ்ச்சியின் போது பூடான் மன்னர் ஜிக்மே கெசர் நம்க்யேலினால், அருண் கபூருக்கு ’டாஷோ’ என்ற பட்டமும், ’புரா மார்ப்’ எனப்படும் சிகப்பு நிற சால்வை மற்றும் ’படாங்கு’ எனப்படும் சடங்கு வாளும் வழங்கப்பட்டது.
இதையும் படிக்க: ரஷிய தளபதி படுகொலை: உஸ்பெகிஸ்தான் இளைஞா் கைது
பூடானின் இந்த அரசு விருதானது மிகவும் அரியதாகவே வெளி நாட்டினருக்கு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
முன்னதாக, பூடான் கல்விதுறையில் இளங்கலை படிப்பில் முன்னேற்றம் கொண்டுவந்ததிற்காகவும், தி ராயல் அகாடமி எனும் கல்விநிலையத்தை நிறுவியதற்காகவும் அருண் கபூருக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு ’ட்ருக் துக்ஸே’ எனும் விருதை பூடான் அரசு வழங்கியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.