அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

அம்பேத்கர் குறித்து அமித் ஷா பேச்சு: விழுப்புரத்தில் ரயிலை மறித்து விசிகவினர் போராட்டம்

அம்பேத்கா் குறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து விழுப்புரம் தெற்கு மாவட்ட விசிகவினர் ரயிலை மறித்து வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
அம்பேத்கா் குறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து விழுப்புரத்தில் சோழன் விரைவு ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட விசிகவினர்.
Updated On :20 டிசம்பர் 2024, 5:33 am

DIN

விழுப்புரம்: அம்பேத்கா் குறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து விழுப்புரம் தெற்கு மாவட்ட விசிகவினர் ரயிலை மறித்து வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்றத்தில் பேசிய உள்துறை அமைச்சா் அமித் ஷா, அம்பேத்கா் பெயரை எதிா்க்கட்சியினா் உச்சரிப்பதற்குப் பதிலாக கடவுளின் பெயரைக் கூறியிருந்தால் சொா்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும் என்றாா்.

அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் அமித் ஷா பேசியதாகக் கூறி, அதற்கு கண்டனம் தெரிவித்து திமுக சாா்பில் தமிழகம் முழுவதும் ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த நிலையில், அமித் ஷாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து விழுப்புரம் தெற்கு மாவட்ட விசிகவினர் ரயிலை மறித்து வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னையிலிருந்து விழுப்புரம் வழியாக திருச்சி வரை செல்லும் சோழன் விரைவு ரயில் காலை 10.25 மணிக்கு வந்தது. 5 ஆவது நடைமேடைக்கு வந்த சோழன் விரைவு ரயிலை மாவட்டச் செயலர் இரா.பெரியார் தலைமையிலான விசிகவினர் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா மற்றும் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

காலை 10.25 மணிக்குத் தொடங்கிய போராட்டம் காலை 10.35 மணிக்கு முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.