மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்துமதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு - டிரோன் மூலம் புனித நீர் தெளிப்பு!லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார் முதல்வர் விஜய்!‘பெரியார் விதைத்த சமூகநீதியின் விதைகள் தழைத்தோங்கட்டும்!’ - முதல்வர் விஜய்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு கோலாகலம்!

ஜம்முவில் பயங்கரவாதிகளின் கூட்டாளிகள் 2 பேர் கைது!

ஜம்முவில் பயங்கரவாதிகளின் கூட்டாளிகள் 2 பேர் கைது செய்யப்பட்டதைப் பற்றி...

கோப்புப் படம்

Published On :

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோப்பூரில் பயங்கரவாதிகளின் கூட்டாளிகள் 2 பேர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சோப்பூரின் தங்கிவாச்சா பகுதியில், இந்தியப் பாதுகாப்புப் படைகளான ராஷ்ட்ரிய ரைஃபில்ஸ், மத்திய ரிசர்வ் காவல் படை மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநில காவல் துறை ஆகிய மூன்று படைகளும் இணைந்து நேற்று (டிச.21) நடத்திய சோதனையின்போது, பயங்கரவாதிகளின் கூட்டாளிகளான இருவர் கைது செய்யப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட அப்துல் ரஷீத் பட் மற்றும் சஜ்ஜத் இஸ்மாயில் ஹூர்ரா ஆகிய இருவரிடமிருந்து ஒரு கைத்துப்பாக்கி, அதன் தோட்டாக்கள், இரண்டு கையெறி குண்டுகள் மற்றும் ரூ.10,600 ரொக்கம் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.

முன்னதாக, ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் வாக்குப் பதிவின்போது, பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து அம்மாநில துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவின் உத்தரவின் பேரில், பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளுக்கு எதிராக தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நடவடிக்கைகளின் மூலம் பயங்கரவாதிகள், அவர்களது கூட்டாளிகள் அவர்களுக்கு உதவி செய்பவர்கள், அவர்களின் ஆதரவாளர்கள் என பலரையும் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.