உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

நெதர்லாந்திலிருந்து வரவழைக்கப்பட்ட சிவப்பு பாண்டாக்கள்!

டார்ஜிலிங் உயிரியல் பூங்காவிற்கு நெதர்லாந்திலிருந்து வரவழைக்கப்பட்ட சிவப்பு பாண்டாக்களைப் பற்றி..

சிவப்பு பாண்டா - Dinamani

Published On :

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கிலுள்ள உயிரியல் பூங்காவிற்கு நெதர்லாந்து நாட்டிலிருந்து 2 சிவப்பு பாண்டாக்கள் வரவழைக்கபட்டன.

கிழக்கு இமயமலைப் பகுதிகளிலும் தென்மேற்கு சீனாவையும் பூர்வீகமாகக் கொண்டவை சிவப்பு பாண்டாக்கள். இது அழிந்து வரும் உயிரினங்களின் ஒன்று என்பதினால் அதனைப் பாதுகாக்க உலக நாடுகள் முயற்சித்து வருகின்றன.

இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தின் டார்ஜிலிங்கிலுள்ள பத்மஜா நாயுடு ஹிமாலயன் உயிரியல் பூங்காவிற்கு நெதர்லாந்து நாட்டின் தலைநகர் ராட்டர்டேமிலிருந்து இரண்டரை வயதுடைய 2 சிவப்பு பாண்டாக்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

கிட்டத்தட்ட 27 மணிநேர விமானப் பயணத்தைத் தொடர்ந்து கால்நடை மருத்துவர்களின் சோதனைக்கு பின்னர் நேற்று (டிச.25) காலை கல்கத்தா விமான நிலையம் வந்தடைந்தது. அங்கிருந்து அதற்காகவே உருவாக்கப்பட்ட குளிர்சாதன வசதியுடன் கூடிய வாகனத்தில் அவை டார்ஜிலிங் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட்டது.

இதுகுறித்து அந்த உயிரியல் பூங்கா அதிகாரிகள் கூறுகையில், இரண்டு சிவப்பு பாண்டாக்களும் மருத்துவக் காரணங்களுக்காக சுமார் ஒரு மாதக் காலம் தனிமைப் படுத்தப்பட்டு, பின்னர் ஏற்கனவே அங்கிருக்கும் சிகப்பு நிற பாண்டாக்களுடன் இணைக்கப்படும் எனத் தெரிவித்தனர்.

கடந்த 10 ஆண்டுகளாக முயற்சி செய்து மாநில மற்றும் மத்திய அரசுகளின் அனுமதிப்பெற்று தற்போது அவை அங்கு கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 2 சிவப்பு பாண்டாக்களுக்கு விஷால் மற்றும் கோஷி என உயிரியல் பூங்கா அதிகாரிகள் பெயர் சூட்டியுள்ளனர்.

ஏற்கனவே, அந்த உயிரியல் பூங்காவில் 7 ஆண், 12 பெண் என மொத்தம் 19 சிவப்பு பாண்டாக்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.