காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய் மதுரை மேலூர் அருகே கார் விபத்தில் 5 பேர் பலி, 3 பேர் காயம் நீர்வரத்து இல்லாததால் தஞ்சை மாவட்டத்தில் களையிழந்த ஆடிப்பெருக்கு விழா! தங்கம் விலை உயர்ந்தது! எவ்வளவு தெரியுமா? வெள்ளி விலை? (ஆக. 3) கபினியில் நீர்த் திறப்பு 27,000 கன அடியாக உயர்வு
/

தென்கொரியாவில் விமான விபத்து: 29 பேர் பலி!

தென்கொரியாவில் நடந்த விமான விபத்து தொடர்பாக...

News image
Updated On :29 டிசம்பர் 2024, 2:41 pm IST

தென்கொரியாவில் நடந்த விமான விபத்தில் 29 பேர் பலியாகினர்.

தாய்லாந்தின் பாங்காங்கில் இருந்து ஜெரு ஏர் பிளைட் 2216 விமானம், 175 பயனிகள் மற்றும் 6 விமான ஊழியர்களுடன் தென் கொரியாவுக்கு சென்ற நிலையில், முவான் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஓடுபாதையில் இருந்து விலகி விமானம் விபத்துக்குள்ளானது.

விமானம் விபத்துக்குள்ளானதும் தீப்பற்றி பயங்கர புகை கிளம்பியது.

இச்சம்பவத்தில் 28 பேர் பலியாகியுள்ள நிலையில், பலர் காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிகை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், மீட்புப்படையினர் விமானத்தில் இருந்து பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒரு விமான பணிப்பெண் மற்றும் ஒரு பயணி மீட்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்த இடத்திற்கு 32 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் வந்துள்ளனர்” என்று தெரிவித்தார்.

விமான நிலையத்தில் விமானம் தரையிறங்க முற்பட்டபோது, ​​”விமானம், பறவைகள் மீது மோதியதின் விளையாக, தரையிறங்கும் கருவியில் தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டு இருக்கலாம்” என்று கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.