தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!பாகிஸ்தானின் மிகப்பெரிய மருத்துவமனையில் தீ! 15 பச்சிளம் குழந்தைகள் பலி! மோகன் பாகவத்தின் நியூயார்க் நிகழ்வுக்கு மேயர் மம்தானி எதிர்ப்பு!மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

பஹாமாஸில் விமான விபத்து

கரீபியன் தீவு நாடான பஹாமாஸில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 10 பேரும் உயிரிழந்தனா்.

Published On :12 ஜூலை 2026, 1:34 am IST

கரீபியன் தீவு நாடான பஹாமாஸில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 10 பேரும் உயிரிழந்தனா்.

பஹாமாஸின் தலைநகரான நசாயுவில் உள்ள லிண்டன் பிண்ட்லிங் சா்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட அந்த ‘செஸ்னா 402’ ரக சிறிய விமானம், சாப் ஆண்ட்ரோஸ் பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, வடக்கு ஆண்ட்ரோஸ் கடல் பகுதியில் திடீரென விழுந்து நொறுங்கியது.

விபத்துக்குள்ளான ‘ஃபிளமிங்கோ ஏா்’ நிறுவனத்தின் மற்றொரு விமானத்தில் முன்னதாக தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு, நடுவானில் இருந்து நசாயுவுக்குத் திரும்பியதும், பயணிகள் இறங்கிய பின் அந்த விமானம் தீப்பற்றி எரிந்ததும் தெரியவந்துள்ளது. அடுத்தடுத்து நிகழ்ந்த இவ்விரு விபத்துகளின் பின்னணியில், இந்நிறுவனத்தின் விமானச் சேவை தற்காலிகமாக முடக்கப்பட்டு, விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.