பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கூட்டணி பேச்சுவார்த்தை: தில்லி செல்கிறார் அண்ணாமலை!

கூட்டணி தொடர்பாக பாஜக நடத்தும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தில்லி செல்கிறார்.

News image
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை
Updated On :13 பிப்ரவரி 2024, 8:34 am

DIN

மக்களவைத் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பாக நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வரும் பிப். 16 ஆம் தேதி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தில்லி செல்கிறார்.

தில்லியில் பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் வரும் பிப். 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அண்ணாமலை பங்கேற்கிறார்.

இந்நிலையில், தில்லி பயணம் மேற்கொள்ளும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் அமித் ஷா மற்றும் ஜே.பி. நட்டா ஆகியோரை சந்தித்து முக்கிய ஆலோசனைகளை மேற்கொள்ளவுள்ளார்.

தமிழகத்தில் ‘என் மண், என் மக்கள் என்ற தலைப்பிலான நடைப்பயணத்தை பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை மேற்கொண்டு வருகிறார். என் மண் என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழா பிப். 25 ஆம் தேதி பல்லடத்தில் நடைபெறுகிறது. இந்நிகழ்வில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.