இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திர அஸ்வினுக்கு நடிகர் தனுஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் 499 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள ரவிசந்திரன் அஸ்வின், இன்று நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட்டில் 500 விக்கெட்டுகளை கடக்கவுள்ளார்.
இந்த நிலையில், தமிழகத்தை சேர்ந்த அஸ்வினுக்கு பல்வேறு தரப்பினர் முன்கூட்டியே வாழ்த்துகளை தெரிவித்து வரும் நிலையில், நடிகர் தனுஷ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
“500 என்ற இலக்கை அடையுங்கள் அஸ்வின், ஓம் நமச்சிவாய” எனத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தம் 738 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அஸ்வின், ஒரு நாள் போட்டிகளில் 156, டி20 போட்டிகளில் 72 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் தனுஷ்?

எப்பவும் தனி வழிதான்: தனுஷ்
இதுதான் புரமோஷனா? புலம்பும் தனுஷ் ரசிகர்கள்!

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த மேற்கு வங்க ஆளுநர்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


