மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கோவில்பட்டி: விபத்தில் நிலக்கரி ஏற்றி வந்த லாரி முற்றிலும் எரிந்து நாசம்

கோவில்பட்டி அருகே நிலக்கரி பாரம் ஏற்றி வந்த டாரஸ் லாரி தடுப்புச் சுவரில் மோதி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் லாரி தீப்பிடித்து முற்றிலும் எரிந்து நாசமானது.

News image
கோவில்பட்டி தெற்கு திட்டங்குளம் பகுதியில் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரியும் லாரி. தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி வரும் தீயணைப்பு வீரர்கள்.
Updated On :22 பிப்ரவரி 2024, 3:21 am

DIN

கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே நிலக்கரி பாரம் ஏற்றி வந்த டாரஸ் லாரி தடுப்புச் சுவரில் மோதி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் லாரி தீப்பிடித்து முற்றிலும் எரிந்து நாசமானது. இதனால் கோவில்பட்டி எட்டயபுரம் நெடுஞ்சாலையில் நள்ளிரவில் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடியில் இருந்து சிவகாசி பேப்பர் மில்லுக்கு நிலக்கரி பாரம் ஏற்றிக்கொண்டு டாரஸ் லாரி ஒன்று புதன்கிழமை இரவு புறப்பட்டு சென்றது. லாரியை எப்போதும் வென்றான் அருகேயுள்ள மஞ்ச நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கற்பகராஜா (30) ஓட்டிச் சென்றார்.

கோவில்பட்டி அருகே தெற்கு திட்டங்குளம் பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை சுமார் 2.25 மணிக்கு லாரி சென்று கொண்டிருந்தபோது திடீரென எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் வேகமாக மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

விபத்தில் முற்றிலும் எரிந்து நாசமான நிலக்கரி பாரம் ஏற்றி வந்த லாரி.

விபத்தில் முற்றிலும் எரிந்து நாசமான நிலக்கரி பாரம் ஏற்றி வந்த லாரி.

இந்த விபத்தில் லாரியின் முன்பக்கம் துண்டாகியது. மேலும் லாரியின் டீசல் டேங்க்கில் தீப்பொறி ஏற்பட்டு மளமளவென லாரியின் பிற பகுதிகளுக்கு தீ பரவி லாரி முழுவதும் கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது.

பலத்த சத்தம் கேட்டு வீடுகளுக்குள் தூங்கிக் கொண்டிருந்த அந்த பகுதி மக்கள் வெளியே வந்து பார்த்தபோது சாலையின் நடுவில் லாரி கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருப்பதை கண்டு போலீசாருக்கும் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர்.

லாரி ஓட்டுநர் கற்பகராஜா, கிளீனர் ஆழ்வார் திருநகரியை சேர்ந்த முருகேசன் ஆகியோர் லாரியின் கண்ணாடியை உடைத்து கீழே குதித்து நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.

தகவல் அறிந்து கோவில்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தர்ராஜன். காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் பார்த்தீபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று எட்டயபுரம் நெடுஞ்சாலையில் போக்குவரத்தை வேறு பாதைக்கு திருப்பி விட்டனர்.

தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒன்றரை மணி நேரமாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் லாரி முற்றிலும் எரிந்து சாம்பலானது.

விபத்து காரணமாக கோவில்பட்டி எட்டயபுரம் நெடுஞ்சாலையில் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இந்த விபத்து சம்பவம் தொடர்பாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.