/

சாதிவாரி கணக்கெடுப்புக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல: முதல்வர் விளக்கம்

சாதிவாரி கணக்கெடுப்புக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல, உங்களுக்கு சாதகமாகதான் நாங்களும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்

News image
Updated On :22 பிப்ரவரி 2024, 7:43 am

DIN

சென்னை: சாதிவாரி கணக்கெடுப்புக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல, உங்களுக்கு சாதகமாகதான் நாங்களும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரவையில் பாமக உறுப்பினர்கள் கேள்விக்கு விளக்கம் அளித்தார்.

சட்டப்பேரவையில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பாமக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து பேசினார்.

அப்போது, சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து நிதிநிலை அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது, சட்டப்பேரவையிலும் பல நேரங்களில் பதில் சொல்லப்பட்டிருக்கிறது.

நீங்கள் சொல்கிற சாதிவாரி கணக்கெடுப்புக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல, உங்களுக்கு சாதகமாகதான் நாங்களும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். குரல் கொடுத்து வருகிறோம்.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

பேரவையில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பேச வாய்ப்பளிக்காததால் பாமக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.