சிறுசேரியில் நகர்ப்புற வனம் ஏற்படுத்த ரூ.5 கோடி!

சிறுசேரியில் நகர்ப்புற வனம் ஏற்படுத்துவதற்காக ரூ.5 கோடி நிதி வனத்துறைக்கு வழங்கப்பட்டது.
சிறுசேரியில் நகர்ப்புற வனம் ஏற்படுத்த ரூ.5 கோடி!

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு மற்றும் வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் செங்கல்பட்டு மாவட்டம், சிறுசேரியில் நகர்ப்புற வனம் ஏற்படுத்துவதற்காக சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத் திட்ட நிதியிலிருந்து ரூ.5 கோடி நிதியை வனத்துறைக்கு வழங்கினர்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் உத்தரவின் பேரில் இன்று (23.02.2024) சென்னை, தலைமைச் செயலகம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அலுவலகக் கூட்டரங்கில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு மற்றும் அமைச்சர் மா.மதிவேந்தன் ஆகியோர் செங்கல்பட்டு மாவட்டம், சிறுசேரியில் நகர்ப்புற வனம் ஏற்படுத்துவதற்காக தமிழ்நாடு பசுமை கால நிலை நிறுவனத்துடன் (TNGCC) இணைந்து, சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத் திட்ட நிதியிலிருந்து ரூ.5 கோடி நிதியை வனத்துறைக்கு வழங்கினர்.

சிறுசேரியில் நகர்ப்புற வனம் ஏற்படுத்த ரூ.5 கோடி!
சென்னையில் 500 இடங்களில் இலவச வைஃபை வசதி: தொடங்கி வைத்தார் ஸ்டாலின்

இந்நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு, இ.ஆ.ப., வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலாளர் சி.சமயமூர்த்தி, இ.ஆ.ப., சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, இ.ஆ.ப., முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலர்/வனத்துறை தலைவர் சுப்ரத் முகபத்ரா, இ.வ.ப., முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலர் (பசுமை தமிழ்நாடு இயக்கம்) தீபக் ஸ்ரீவத்சவா, இ.வ.ப., தலைமை வனப் பாதுகாவலர் (சென்னை மண்டலம்) கௌ.கீதாஞ்சலி, இ.வ.ப., செங்கல்பட்டு மாவட்ட வன அலுவலர் ரவி மீனா, இ.வ.ப., தலைமைத் திட்ட அமைப்பாளர் எஸ்.ருத்ரமூர்த்தி மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com