இது தொடா்பாக முதல்வா் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், கப்பை கிராமத்தில் சனிக்கிழமை(பிப்.24) அதிகாலை யுவராஜ் என்பவர் தன் குடும்பத்தாருடன் தனது சொந்த ஆட்டோவில் சென்னையிலிருந்து திருவண்ணாமலை கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பும் வழியில் எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி சாலையோர தடுப்புச் சுவற்றில் மோதி அருகிலிருந்த தரைக் கிணற்றில் விழுந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த யுவராஜ் இரு மகன்கள் பிரதீஷ் (9) மற்றும் ஹரிபிரசாத் (8) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.