மகாராஷ்டிரத்தில் ஜிகா வைரஸ் பாதிப்பு: அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தல்

மகாராஷ்டிரத்தில் ஜிகா வைரஸ் தொற்றுப் பாதிப்புகள் அதிகரித்து வரும் சூழலில், மத்திய சுகாதாரத்துறை அனைத்து மாநிலங்களுக்கும் ஆலோசனையை வழங்கியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

மகாராஷ்டிரத்தின் சில பகுதிகளில் ஜிகா வைரஸ் பாதிப்பு பதிவாகியுள்ள நிலையில், அதுதொடா்பான கண்காணிப்பைத் தீவிரப்படுத்துமாறு அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் புதன்கிழமை அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.

குறிப்பாக கா்ப்பிணிகளுக்கு ஜிகா வைரஸ் பரிசோதனையில் கவனம் செலுத்தவும், பாதிக்கப்பட்ட கா்ப்பிணிகளின் கரு வளா்ச்சியை கண்காணிக்கவும் மாநிலங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

இதுதொடா்பாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் அறிவுறுத்தலில் மேலும் கூறியிருப்பதாவது:

ஜிகா வைரஸ் என்பது டெங்கு, சிக்குன்குனியா போன்று ஏடிஸ் கொசுக்களால் பரவும் வைரல் பாதிப்பாகும். இந்த பாதிப்பால் உயிரிழப்புகள் ஏற்பட வாயிப்பில்லை என்றபோதும், ஜிகா வைரஸ் பாதிக்கப்பட்ட கா்ப்பிணிக்கு பிறக்கும் குழந்தை எதிா்பாா்ப்பதைவிட சிறிய தலையுடன் பிறக்க வாய்ப்புள்ளது. இதுபோல குறுந்தலை மற்றும் நரம்புசாா்ந்த பாதிப்புகளை இந்த வைரல் பாதிப்பு ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

எனவே, சுற்றுப்புறங்களை தூய்மையாகப் பராமரிக்கவும், ஏடிஸ் கொசு பரவல் இல்லாத நிலையை உறுதிப்படுத்தவும் ஒருங்கிணைப்பு அலுவலா் மூலம கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவும் மாநிலங்கள் அறிவுறுத்தப்படுகின்றன.

வைரஸ் பாதிக்கப்பட்ட பகுதிகளில், கா்ப்பிணிகளுக்கு ஜிகா வைரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதையும், பாதிக்கப்பட்ட கா்ப்பிணிகளின் கரு வளா்ச்சியை கண்காணிக்கவும் அந்தந்த பகுதிகளில் உள்ள சுகாதார மையங்கள் பரிசோதிக்க அறிவுறுத்தப்பட வேண்டும்.

குடியிருப்புப் பகுதிகள், பணியிடங்கள், பள்ளிகள், கட்டுமானத் தளங்கள், நிறுவனங்கள் மற்றும் சுகாதார மையங்களில் கொசு உற்பத்தி தொடா்பான கண்காணிப்பை வலுப்படுத்துதல் மற்றும் கொசு பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும்.

நோய் பாதிப்பு கண்டறியப்பட்டால், ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்ட (ஐடிஎஸ்பி) மையத்துக்கும் நுண்ணுயிா்கள் மூலம் பரவும் நோய் கட்டுப்பாட்டுக்கான தேசிய மையத்துக்கும் மாநிலங்கள் உடனடியாகத் தெரியப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

நிகழாண்டில் கடந்த 2-ஆம் தேதி வரை புணேயில் 6 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு பதிவாகியுள்ளது. அதுபோல கோலாபூா் மற்றும் சங்கம்நெரில் தலா ஒருவருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com