லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

திடீர் உடல்நலக் குறைவு: அமைச்சர் துரைமுருகன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி

அமைச்சர் துரைமுருகனுக்கு சனிக்கிழமை திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

News image
அமைச்சர் துரைமுருகன் உடல்நலக் குறைவு காரணமாக சனிக்கிழமை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Updated On :13 ஜூலை 2024, 9:21 am

DIN

சென்னை: அமைச்சர் துரைமுருகனுக்கு சனிக்கிழமை திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது.வாக்கு எண்ணிக்கை 20 சுற்றுகளாக நடைபெறும் நிலையில், 19 சுற்று வாக்குகள் எண்ணிக்கை முடிவில் திமுக வேட்பாளர் அன்னியூர் அ.சிவா 65,199 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

இதையடுத்து திமுகவினர் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

திமுக மூத்த தலைவர்கள் பலரும் திமுக தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு வந்திருந்து வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

இதனிடையே, திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்திற்கு வந்து நிர்வாகிகள், தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை கொண்டாடினார்.

இந்த நிலையில், அறிவாலயத்திற்கு வருகை தந்த அமைச்சர் துரைமுருகனுக்கு தீடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு ்து தொடர் சிகிச்சைக்காக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள துரைமுருகனுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.