
மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியை சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி பாலசுப்பிரமணியன் என்பர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் துணைச் செயலாளர் பாலசுப்பிரமணியன் வல்லபபாய் சாலை பகுதியில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தல்லாகுளம் காவல் துறையினர் பாலசுப்பிரமணியன் கொலை சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாலசுப்பிரமணியன் மீது சில குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படும் நிலையில், முன்விரோதம் காரணமாக அவர் கொல்லப்பட்டரா என்ற கோணத்திலும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை பெரம்பூரில் கடந்த ஜூலை 5-ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவா் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொல்ல செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், நாம் தமிழர் கட்சி நிர்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.