கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

ரூ. 541.32 கோடியில் குடியிருப்புகள், வணிக வளாகம்: முதல்வர் திறந்து வைத்தார்!

புதிய குடியிருப்புகள், வணிக வளாகம் முதல்வர் ஸ்டாலின் திறப்பு.

News image

குடியிருப்புகள், வணிக வளாகம் ஆகியவற்றை திறந்து வைக்கும் முதல்வர் ஸ்டாலின்.

Updated On :22 ஜூலை 2024, 4:46 pm IST

ரூ. 541.32 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகள், வணிக வளாகம் ஆகியவற்றை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (22.7.2024) தலைமைச் செயலகத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் 541 கோடியே 32 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 4184 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

மேலும், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் 382 கோடியே 84 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 1459 தமிழ்நாடு அரசு அலுவலர் வாடகை குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகம் ஆகியவற்றையும் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய புதிய குடியிருப்புகளை திறந்து வைத்தல்

அனைவருக்கும் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் சென்னையில் கார்கில் நகர் திட்டப்பகுதியில் தூண் மற்றும் 15 தளங்களுடன் 190 கோடியே 88 லட்சம் ரூபாய் செலவில் 1200 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், திருச்சினாங்குப்பம் பகுதி – 2 திட்டப்பகுதியில் தரை மற்றும் நான்கு தளங்களுடன் 35 கோடியே 63 லட்சம் ரூபாய் செலவில் 360 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்; திருவள்ளூர் மாவட்டம், மணலி புதுநகர் பகுதி – 2 திட்டப்பகுதியில் தூண் மற்றும் 14 தளங்களுடன் 226 கோடியே 64 லட்சம் ரூபாய் செலவில் 1792 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்; தேனி மாவட்டம், தம்மணம்பட்டி திட்டப்பகுதியில் 29 கோடியே 52 லட்சம் ரூபாய் செலவில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் 264 குடியிருப்புகள் மற்றும் 36 தரைத்தள குடியிருப்புகள்; புதுக்கோட்டை மாவட்டம், பாலன்நகர் பகுதி – 2 திட்டப்பகுதியில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் 23 கோடியே 57 லட்சம் ரூபாய் செலவில் 256 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் கறம்பக்குடி திட்டப்பகுதியில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் 10 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் 96 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்; நீலகிரி மாவட்டம், அல்லாஞ்சி திட்டப்பகுதியில் தரை மற்றும் ஒரு தளத்துடன் 24 கோடியே 58 லட்சம் ரூபாய் செலவில் 180 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்; என மொத்தம் 541 கோடியே 32 லட்சம் ரூபாய் செலவில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள 4184 குடியிருப்புகளை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.

இன்றைய நாள் முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ள இப்புதிய குடியிருப்புகள், ஒவ்வொன்றும் தலா 400 சதுர அடி பரப்பளவுடன், ஒரு பல்நோக்கு அறை, படுக்கை அறை, சமையல் அறை மற்றும் கழிவறை ஆகிய வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

மேலும், அனைத்து குடியிருப்பு வளாகங்களும், தார் சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவு நீரேற்று வசதி, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஆகிய வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. “நம் குடியிருப்பு, நம் பொறுப்பு” திட்டத்தின் கீழ் அனைத்து திட்டப்பகுதிகளிலும் குடியிருப்போர் நலச்சங்கங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு அலுவலர் வாடகை குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகம் திறந்து வைத்தல்

தமிழ்நாடு அரசு அலுவலர் வாடகைக் குடியிருப்பு திட்டத்தின் கீழ், சென்னை மாவட்டம், சைதாப்பேட்டை, தாடண்டர் நகரில் 344 கோடியே 47 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 1387 அடுக்குமாடி குடியிருப்புகள், அரியலூர் மாவட்டம், அரியலூரில் 19 கோடியே 19 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 72 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் சென்னை மாவட்டம், அசோகா காலனியில் 19 கோடியே 18 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வணிக வளாகம்; என மொத்தம் 382 கோடியே 84 லட்சம் ரூபாய் செலவில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள 1459 தமிழ்நாடு அரசு அலுவலர் வாடகை குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகக் கட்டடம் ஆகியவற்றை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.