
கரூர் ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் ரூ.9.10 கோடி மதிப்பீட்டிலான கம்பிவட ஊர்தியை பக்தர்கள் பயன்பாட்டிற்காக முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 8.3.2024 ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர், லட்சுமி நரசிம்மசுவாமி கோயிலில் ரூ. 20.30 கோடி செலவில் பக்தர்களுக்கான காத்திருப்பு அறை, மின்தூக்கி, உணவகம், பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள், கட்டணச் சீட்டு மையம் போன்ற பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளுடன் திறந்து வைக்கப்பட்ட கம்பிவட ஊர்தியானது பக்தர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில் கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், அய்யர்மலை, ரத்தினகிரீஸ்வரர் கோயிலானது 1,178 அடி உயரத்தில் அமைந்துள்ள மலைக்கோயிலாகும்.
இத்திருக்கோயிலுக்கு வருகைதரும் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பக்தர்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்திடும் வகையில் ரூ.6.70 கோடி செலவில் கம்பிவட ஊர்தி அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், ரூ.2.40 கோடி செலவில் காத்திருப்பு அறை, பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள், கட்டணச் சீட்டு மையம் போன்ற அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ஒரு மணி நேரத்தில் 192 நபர்கள் பயணம் செய்திடும் வகையில் ரூ.9.10 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள கம்பிவட ஊர்தி மற்றும் அடிப்படை வசதிகளை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று(ஜூலை 24) பக்தர்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.