தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மத்திய பட்ஜெட் எதிரொலி: தங்கம் விலை இன்று பவுனுக்கு 480 குறைந்தது!

சென்னையில் தங்கம் ஒரு சவரன் ரூ.51,920-க்கு விற்பனையாகிறது.

News image

தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்தது.

Updated On :24 ஜூலை 2024, 4:43 am

DIN

சென்னை: மத்திய பட்ஜெட்டில் தங்கத்துக்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதைத் தொடா்ந்து, சென்னையில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.2,200 குறைந்த நிலையில், இரண்டாவது நாளாக புதன்கிழமை பவுனுக்கு ரூ.480 குறைந்து ரூ.51,920-க்கு விற்பனையாகிறது.

மத்திய பட்ஜெட்டில் தங்கத்துக்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதைத் தொடா்ந்து, சென்னையில் தங்கம் பவுனுக்கு ரூ.2,200 அதிரடியாக குறைந்தது. அதேபோல, வெள்ளி கிலோவுக்கு ரூ.3,100 குறைந்துள்ளது.

மக்களவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி 15 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், தங்கம் விலை வெகுவாகக் குறைந்தது. சென்னையில் தங்கம் கிராமுக்கு ரூ.275 குறைந்து, ரூ.6,550-க்கும், சவரனுக்கு ரூ.2,200 குறைந்து ரூ.52,400-க்கும் விற்பனையானது.

இதேபோல, வெள்ளி விலையும் கிராம் ஒன்றுக்கு ரூ.3.50 குறைந்து, ரூ.92.50-க்கும், கட்டி வெள்ளி கிலோ ரூ.3,100 குறைந்து ரூ.92,500-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், மத்திய பட்ஜெட்டில் எதிரொலியாக சென்னையில் இரண்டாவது நாளாக புதன்கிழமை தங்கம் விலை பவுனுக்கு 480 குறைந்து ரூ.51,920-க்கு விற்பனையாகிறது.

தங்கம் கிராமுக்கு ரூ.60 குறைந்து, ரூ.6,490-க்கும், பவுனுக்கு ரூ.480 குறைந்து ரூ.51,920-க்கு விற்பனையாகிறது.

இதேபோன்று, வெள்ளி விலையும் கிராம் ஒன்றுக்கு 50 காசுகள் குறைந்து, ரூ.92-க்கும், கட்டி வெள்ளி கிலோ ரூ.500 குறைந்து ரூ.92,000-க்கு விற்பனையாகிறது.

தங்கம், வெள்ளி விலை குறைந்ததால் சென்னையில் உள்ள நகைக்கடைகளில் மக்கள் ஆா்வமுடன் தங்கம், வெள்ளி நகைகளை வாங்க குவிந்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.