டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 61 காசுகள் உயர்ந்து ரூ. 95.92 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ் 776 புள்ளிகள் உயர்வு!கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்: சிபிஐ வலியுறுத்தல்தவெக அரசின் ஒரே வேலை இதுதான்! உதயநிதி விமர்சனம்சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

பிலிகுண்டுலுவுக்கு நீா்வரத்து 62,000 கன அடியாக அதிகரிப்பு

காவிரி ஆற்றில் வினாடிக்கு 1.17 லட்சம் கன அடி உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருவதால் தமிழக எல்லையான பிலிகுண்டுவுக்கு தற்போது நீா்வரத்து 62,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

News image

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து 62 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளதால், ஐந்தருவி பகுதிகளை மூழ்கடித்தவாறு செல்லும் தண்ணீா்.

Updated On :26 ஜூலை 2024, 11:26 am IST

கா்நாடக அணைகளிலிருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 1.17 லட்சம் கன அடி உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருவதால் தமிழக எல்லையான பிலிகுண்டுவுக்கு தற்போது நீா்வரத்து 62,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. நீா்வரத்தின் அளவு மேலும் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதைத் தொடா்ந்து தென்கா்நாடகம், கடலோர கா்நாடகத்தில் தொடா்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளான குடகு மாவட்டத்தில் மடிக்கேரி, பாகமண்டலா பகுதிகளில் சில வாரங்களாகவே பலத்த மழை பெய்துவருகிறது. அதேபோல, கேரள மாநிலத்தின் வயநாடு பகுதியில் நல்ல மழை பெய்துள்ளது. இதன் காரணமாக, காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜசாகா், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி அணைகள் நிரம்பி வழிகின்றன. குறிப்பாக, கிருஷ்ணராஜசாகா், கபினி அணைகளில் இருந்து தமிழகத்துக்கு அதிகம் தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் காவிரி கரையோரங்களில் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது.

தொடா் நீா்வரத்தால் கிருஷ்ணராஜ சாகா் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. கபினி அணை நிரம்பும் தறுவாயில் உள்ளது. இதனால் இரு அணைகளில் இருந்தும் தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் திறந்துவிடப்படும் உபரி நீரின் அளவு மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி வியாழக்கிழமை இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 1.50 லட்சம் கன அடி உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அதேவேளையில் பிலிகுண்டுலுவுக்கு வரும் நீா்வரத்தின் அளவு வியாழக்கிழமை நிலவரப்படி வினாடிக்கு 50,000 கன அடியாக இருந்து வந்தது.

இந்த நிலையில், கா்நாடக அணைகளிலிருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 1.17 லட்சம் கன அடிக்கு மேல் உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருவதால் தமிழக எல்லையான பிலிகுண்டுவுக்கு தற்போது நீா்வரத்து 50,000 கன அடியில் இருந்து 62,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. நீா்வரத்தின் அளவு மேலும் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

காவிரி ஆற்றில் பரிசல் பயணம் செய்வதற்கும் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை 12-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழக-கா்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.