இந்தியாவில் நடைபெறவுள்ள ‘க்வாட்’ உச்சி மாநாட்டில் பங்கேற்பதாக ஜோ பைடன் உறுதி

இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள ‘க்வாட்’ நாடுகளின் வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதியளித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
Published on
Updated on
1 min read

வாஷிங்டன்: இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள ‘க்வாட்’ நாடுகளின் வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதியளித்துள்ளார்.

இந்திய - பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்துக்கு பதிலடியாக, இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகள் இணைந்து ‘க்வாட்’ அமைப்பை ஏற்படுத்தின.

இந்தக் கூட்டமைப்பின் உச்சி மாநாடு கடந்த ஆண்டு மே மாதம் ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா நகரில் நடைபெற்றது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
செப்டம்பர் 21 இல் இலங்கை அதிபர் தேர்தல்

இந்த நிலையில், இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள குவாட் நாடுகளின் வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதியளித்துள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர்களுடான சந்திப்பின் போது தேசிய பாதுகாப்பு தகவல் தொடர்பு ஆலோசகர் ஜான் கிர்பி தெரிவித்ததாவது:

வரும் நவம்பா் 5-ஆம் தேதி அமெரிக்க அதிபா் தோ்தல் நடைபெற உள்ளது. இந்தத் தோ்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக அதிபா் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட இருந்த நிலையில், போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதயைடுத்து அதிபர் தேர்தலில் இதற்கு முன்பு இல்லாத அளவுக்கு அதிபர் வேட்பாளர்களிடையே கடும் போட்டிகள் நிலவும் என்று எதிர்பார்க்கலாம்.

மேலும் இந்த ஆண்டு ‘க்வாட்’ உச்சி மாநாட்டை இந்தியா நடத்த உள்ளது. இதில் பங்கேற்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதியளித்துள்ளதாக தெரிவித்தார்.

2020 ஆம் ஆண்டின் ‘க்வாட்’ உச்சி மாநாட்டை பைடன் நடத்தினார். அதன் பின்னர் ‘க்வாட்’ கூட்டமைப்பின் தலைவர்கள் சுழற்சி அடிப்படையில் வருடாந்திர உச்சிமாநாட்டை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com