6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வயநாடு நிலச்சரிவில் சிக்கி தமிழக தொழிலாளி பலி: முதல்வர் மு.க. ஸ்டாலின் நிவாரணம்!

வயநாடு நிலச்சரிவில் சிக்கி தமிழக தொழிலாளி பலியான நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.

News image
மு.க.ஸ்டாலின்- கோப்புப் படம்
Updated On :30 ஜூலை 2024, 1:29 pm

DIN

கேரளத்தின் வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த காளிதாஸ் என்பவரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி நீலகிரி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த தொழிலாளி பலியானார். கேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 100 க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

காணாமல் போன பலரை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன. நீலகிரி மாவட்டம் கேரள மாநிலத்தின் வயநாட்டை ஒட்டியுள்ளதால், நீலகிரி மாவட்டத்தின் கூடலூர், பந்தலூர் தாலுகாவைச் சேர்ந்தவர்கள் தினமும் வேலைக்காக வயநாடு சென்று வருகின்றனர்.

அப்படிச் சென்றவர்களில் கேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் உள்ள மேப்பாடி, சூரல்மலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, கூடலூர் புளியம்பாறையைச் சேர்ந்த காளிதாஸ் பலியானார். அவர் நிலச்சரிவில் உயிரிழந்துள்ளது உறுதியாகி உள்ளது.

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நீலகிரி மாவட்டம், கூடலூர் வட்டம், தேவாலா கிராமம், மரப்பாலம், அட்டிக்கொல்லி பகுதியைச் சேர்ந்த காளிதாஸ் கட்டுமானப் பணிக்காக கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்திலுள்ள முண்டக்கை, சூரல்மலைக்கு சென்றிருந்தபோது இன்று (ஜூலை 30) அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

கேரள மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த காளிதாஸின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இந்த இயற்கைப் பேரிடரில் சிக்கி உயிரிழந்த காளிதாஸின் குடும்பத்திற்கு ரூ. 3 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.