வெப்பச் சலனம் காரணமாக மழைக்கு வாய்ப்பு: எங்கெல்லாம்?
தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.


தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:
வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. வெப்பச் சலனம் காரணமாக அதிக மழை பெய்யும் மற்றொரு நாளாக இன்று(ஜூன் 2) இருக்கும்.
திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் மழை பெய்யும். சென்னையில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நேற்று தரமணி, பெருங்குடியில் ஓரளவுக்கு மழை பெய்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
தென்தமிழக பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், ஜூன் 2 முதல் ஜூன் 8-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல், பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...