ஆட்சி யாருக்கு? தாறுமாறான வேகத்தில் பங்குச்சந்தை!
இன்றைய பங்குச்சந்தை வர்த்தகம் புதிய உச்சத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.


மக்களவைத் தேர்தல் முடிவுகள் நாளை (ஜூன்.4) வெளியாகவுள்ள நிலையில், பங்குச்சந்தை வர்த்தகம் புதிய உச்சத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.
தேசிய பங்குச்சந்தை வர்த்தகத்தின் முதல்நாளான இன்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டியின் மதிப்புகள் அதிவேகமாக உயர்ந்து வருகின்றன.
தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகவுள்ளதால், ஆட்சி மாற்றம் நிகழ்ந்தால் பங்குசந்தை நிறுவனங்களின் பங்கு விலைகள் குறையும் என பலரும் பணத்தை வைத்துக்கொண்டு முதலீடு செய்யக் காத்திருக்கின்றனர்.
ஆனால், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் என தேர்தல் கருத்து கணிப்புகள் வெளியானதால் இப்போதே பலரும் பங்குச்சந்தையில் முதலீடு செய்து வருகின்றனர். மேலும், வாங்கிய பங்குகளை விற்க முடியாத அளவுக்கு திணறியும் வருகின்றனர்.
இன்று காலை துவங்கிய பங்குச்சந்தை வர்த்தகத்தில் 12.25 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 2355 புள்ளிகள் அதிகரித்து 76243.03-ல் ஏற்றத்தைக் கண்டு வருகிறது. நிஃப்டி 765 புள்ளிகள் அதிகரித்து 23233.04-ல் உச்சத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.
ஐடி நிறுவனங்கள், வங்கிகள், பொதுத்துறை நிறுவனங்கள் என பல நிறுவனப் பங்குகளின் விலையும் தாறுமாறாக உயர்ந்து வருகின்றன!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...