வாரத்தின் முதல் நாளான இன்று(திங்கள்கிழமை) பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 83,494.49 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.40 மணியளவில் சென்செக்ஸ் 524.88 புள்ளிகள் குறைந்து 83,045.47 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 158.55 புள்ளிகள் குறைந்து 25,535.80 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
நிஃப்டி குறியீட்டில் எம்&எம், பார்தி ஏர்டெல், சிப்லா, சன் பார்மா, எல்&டி, டாடா மோட்டார்ஸ் பிவி, டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ், இன்ஃபோசிஸ், ஐஷர் மோட்டார்ஸ், மேக்ஸ் ஹெல்த் ஆகியவை அதிக இழப்பைச் சந்தித்த மற்ற நிறுவனங்களாகும்.
மாறாக, இண்டிகோ, டெக் எம், ஆக்சிஸ் வங்கி, எச்யுஎல், கோடக் வங்கி, பிஇஎல், ட்ரென்ட், ஜியோ ஃபின், எச்டிஎஃப்சி லைஃப் ஆகியவை அதிக லாபம் ஈட்டின.
நிஃப்டி மிட்கேப் குறியீடு 0.53 சதவீதமும் நிஃப்டி ஸ்மால்கேப் குறியீடு 0.64 சதவீதமும் சரிந்தது.
துறைகளில் நிஃப்டி பார்மா குறியீடு 0.6 சதவீதம், ஐடி 0.5 சதவீதம், ஆட்டோ 0.4 சதவீதம் சரிந்தன. அதேநேரத்தில் நிஃப்டி மெட்டல் குறியீடு 0.24 சதவீதம் லாபம் ஈட்டியது.
ஐரோப்பிய நாடுகள் மீது வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியது உலக பங்குச்சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.