ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

சத்தீஸ்கரில் போலீஸ் இன்பார்மர் நக்ஸல்களால் சுட்டுக் கொலை

சத்தீஸ்கர் மாநிலம் கொண்டகான் மாவட்டத்தில் போலீஸ் இன்பார்மராக செயல்பட்ட ஒருவர், நக்ஸல்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீஸார் சனிக்கிழமை தெரிவித்தனர்.

News image
சுட்டுக் கொலை
Updated On :8 ஜூன் 2024, 7:34 am

DIN

சத்தீஸ்கர் மாநிலம் கொண்டகான் மாவட்டத்தில் போலீஸ் இன்பார்மராக செயல்பட்ட ஒருவர், நக்ஸல்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீஸார் சனிக்கிழமை தெரிவித்தனர்.

தனோரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திம்டி கிராமத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றுவிட்டு வெள்ளிக்கிழமை இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது தினேஷ் மாண்டவியை நக்ஸல்களால் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

இதில், பலத்த காயம் அடைந்த மாண்டவி கேஷ்கலில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது உயிரிழந்தார்.

நக்ஸல்களால் சுட்டுக்கொல்லப்பட்ட மாண்டவி காவல்துறையின் சிறப்பு புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் தருபவராக செயல்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தாக்குதல் நடத்தியவர்களைக் கண்டுபிடிக்க பாதுகாப்புப் படையினர் அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.