தலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!ஈரானில் மகளிர் பள்ளி மீது தாக்குதல்: அமெரிக்க படைகளே காரணம் - ஆதாரம் வெளியானது!ஈரானின் உச்ச தலைவராகிறார் மறைந்த கமேனியின் மகன்: ரஷிய அதிபர் புதின் வாழ்த்து!நாடாளுமன்றத்தைவிட்டு ஓடிவிட்டார் மோடி! மேற்காசியப் போர் பற்றி விவாதிக்க வேண்டாமா? - ராகுல் காந்தி
/

அகீல் ஹுசைன் அபார பந்துவீச்சு: 39 ரன்களுக்கு ஆல் அவுட்டான உகாண்டா

News image
Updated On :9 ஜூன் 2024, 4:13 am

DIN

உகாண்டா அணியை 134 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி அபார பெற்றி பெற்றது.

டி20 உலகக்கோப்பை தொடரின் 18வது லீக் ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் - உகாண்டா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின. பிராவிடென்ஸ் இன்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மேற்கிந்திய தீவுகள் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 173 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக அந் அணியில் ஜான்சன் சார்லஸ் 44, ஆண்ட்ரே ரஸல் 30 ரன்கள் எடுத்தனர். 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற கடின இலக்கை துரத்திய உகாண்டா அணி, மேற்கிந்திய தீவுகள் வீரர்களின் அபார பந்துவீச்சால் நிலைகுலைந்தது.

உகாண்டா அணி 12 ஓவர்களிலேயே 39 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வியை தழுவியது.

இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி 134 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சிறப்பாக பந்துவீசிய அகீல் ஹுசைன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.