குவைத் தீ விபத்து: ராகுல் காந்தி, மம்தா, பினராயி விஜயன் இரங்கல்!

குவைத் தீ விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ராகுல் காந்தி, மம்தா, பினராயி விஜயன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
குவைத் தீ விபத்து: ராகுல் காந்தி, மம்தா, பினராயி விஜயன் இரங்கல்!
Published on
Updated on
1 min read

குவைத் நாட்டின் மேங்காஃப் மாவட்டத்தில் அடுக்குமாடிக் கட்டடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 49 பேர் பலியாகியுள்ளனர். பலியானவர்களில் 10 பேர் இந்தியர்கள் எனவும் கூறப்படுகிறது.

அந்நாட்டு நேரப்படி புதன்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு ஆறு மாடிக் கட்டடத்தில் 195-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கியிருந்ததாகவும் அவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழ்நாடு, கேரளத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில்,“ குவைத் நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் 40-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பலியான செய்தி அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். இந்திய அரசு, நமது குடிமக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து, கண்ணியமான வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்ய வேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில்,“ ஏற்கனவே 40-க்கும் மேற்பட்ட உயிர்களை பலி வாங்கிய குவைத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து பற்றி அறிந்து ஆழ்ந்த அதிர்ச்சி அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

குவைத்தில் உள்ள மேற்கு வங்கத்தை பூர்வீகமாகக் கொண்ட மக்களின் நல்வாழ்வைப் பற்றி அறியவும், அவசரகால அடிப்படையில் அனைத்து தகுந்த நடவடிக்கைகளையும் எடுக்கவும் வெளியுறவு அமைச்சகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்குமாறு தில்லியில் உள்ள எனது தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளேன்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில்,“ குவைத்தின் மேங்காஃப் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 40-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். பலியானவர்களில் கேரளத்தைச் சேர்ந்தவர்கள் பலர் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாண்புமிகு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்க தேவையான ஏற்பாடுகளை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com