
பனிவிழும் மலர்வனம் தொடரின் ஒளிபரப்பு நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரமான ரோஜாவே தொடரில் நாயகனாக நடித்த சித்தார்த் குமரனும், பாரதி கண்ணம்மா தொடரில் நாயகியாக நடித்த விணுஷா தேவியும் நடிக்கும் புதிய தொடர் பனிவிழும் மலர்வனம்.
சரவணன் மீனாட்சி, தேன்மொழி பி.ஏ., ஈரமான ரோஜாவே ஆகிய தொடர்களில் நடித்ததன் மூலம் மக்கள் மனங்களில் இடம்பிடித்தவர் நடிகர் சித்தார்த் குமரன்.
அதேபோல், பாரதி கண்ணம்மா தொடரில் நாயகியாக நடித்த விணுஷா தேவி, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவர் நடிக்கும் முதல் தொடர் இதுவாகும்.
மோதலும் காதலும் தொடரின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இத்தொடர் இந்த வார இறுதியில் நிறைவடைகிறது. இத்தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
இந்நிலையில், பனிவிழும் மலர்வனம் தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரின் முன்னோட்டக் காட்சி வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும், இத்தொடர் அக்கா - தம்பி மற்றும் அண்ணன் - தங்கை இடையே நடக்கும் நிகழ்வுகள் குறித்த கதையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.