
ஆம்பூர் அருகே அனுமதியின்றி நிலத்தில் நாட்டு துப்பாக்கியைப் பதுக்கிவைத்திருந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த வெங்கடசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட ராளகொத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி மஞ்சுளா தம்பதியினர்.
இவர்கள் கடந்த ஒன்றாம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் தங்களது பசுமாட்டை
மேய்ச்சலுக்கு விடப்பட்டிருந்தனர். அப்போது வயலில் பதுக்கி வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்து பசுமாட்டின் வாய் மற்றும் தாடை பகுதி கிழிந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.
இது குறித்து உமராபாத் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், குப்புராஜாபாளையம் பகுதியைச் சேர்ந்த சதீஷ் (24) மற்றும் அங்கியாபள்ளி பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதில், வனவிலங்குகளை வேட்டையாட வைக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டு வெடித்து மேய்ச்சலுக்கு விடப்பட்டிருந்த பசுமாடு வாய் மற்றும் தாடை கிழிந்தது தெரியவந்தது.
மேலும் இவர்கள் விவசாய நிலத்தில் அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கி பதுக்கி வைத்து வனவிலங்குகளைவேட்டையாடி வருவதும் விசாரணையில் தெரியவந்தது.
இது தொடர்பாக மேலும் இருவர் மீதும் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
அவர்களிடமிருந்து நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்து உமராபாத் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.