தூத்துக்குடி: தூத்துக்குடி மில்லர்புரம் பகுதியில் வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் என்சிசி அலுவலர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
கேரளம் மாநிலம் மலப்புரம் திருவாலியைச் சேர்ந்தவர் விஷ்ணு (31). தேசிய மாணவர் படையின் கப்பல் படை பிரிவு அலுவலர். இவர் தற்போது தூத்துக்குடி தபால் தந்தி காலனியில் வசித்து வந்தார்.
இந்த நிலையில், இவர் வெள்ளிக்கிழமை காலையில் தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் நடைபெற்ற சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாராம். இவர் மில்லர்புரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த தனியார் பேருந்து இவர் மீது மோதி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த விஷ்ணு சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து தகவல் அறிந்த தென்பாகம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த விஷ்ணுவுக்கு இரண்டரை ஒரு குழந்தை உள்ளது. யோகா தினத்தில் என்சிசி அலுவலர் உயிரிழந்த சம்பவம் அலுவலர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசுப் பேருந்து மோதி பெண் பக்தா் உயிரிழப்பு

இருசக்கர வாகனங்கள் மோதல்: முதியவா் உயிரிழப்பு

லாரி - இருசக்கர வாகனம் மோதல் தம்பதி உயிரிழப்பு

ஆட்டோ மீது பைக் மோதி இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


