
சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட அதிமுகவினரை, பேரவைத் தலைவர் அப்பாவுவின் உத்தரவின் பேரில் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கேள்வி நேரத்திற்கு முன்பாக கள்ளச்சாராய சம்பவத்தை விவாதிக்கக்கோரி அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். மேலும், கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று அதிமுகவினர் முழக்கங்களை எழுப்பினர்.
இந்நிலையில், பேரவைத் தலைவர் அப்பாவுவின் உத்தரவின் பேரில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் தொடர்பாக, அதிமுகவினர் தொடர்ந்து 3 ஆம் நாளாக பேரவையில் அமளியில் ஈடுபட்டனர்.
சட்டப்பேரவை நடவடிக்கையில் அதிமுகவினர் பங்கேற்க ஒரு நாள் தடை விதித்து சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு உத்தரவிட்டுள்ளார். மேலும், பேரவையில் அமளியில் ஈடுபட்டு அதிமுகவினர் பேசியது அவைக்குறிப்பில் இடம்பெறாது என்று அப்பாவு தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.