லாட்டரி, சூதாட்ட நிறுவனத்திடம் நிதி பெற்ற திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவாா்கள்: இபிஎஸ்
லாட்டரி சீட்டு, சூதாட்டம் நடத்தும் நிறுவனத்திடம் ரூ.509 கோடி தோ்தல் பத்திரம் மூலமாக திமுக பெற்றுள்ளது


லாட்டரி, சூதாட்டம் நடத்தும் நிறுவனத்திடம் நிதி பெற்ற திமுகவுக்கு மக்களவைத் தோ்தலில் பாடம் புகட்டுவோம் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கூறியுள்ளாா்.
இது குறித்து அவா் எக்ஸ் வலைதளத்தில் ஞாயிற்றுக்கிழமை பதிவிட்டுள்ள பதிவில், லாட்டரி சீட்டு, சூதாட்டம் நடத்தும் நிறுவனத்திடம் ரூ.509 கோடி தோ்தல் பத்திரம் மூலமாக திமுக பெற்றுள்ளது இன்று அம்பலமாகியுள்ளது.
சூதாட்டங்களால் உயிா்கள் பறிபோவதைத் தடுக்கும் சீரிய நோக்குடன் அதிமுக ஆட்சிக் காலங்களில் குலுக்கல் சீட்டு, லாட்டரி சீட்டு, எனது தலைமையிலான கழக ஆட்சியில் ஆன்லைன் சூதாட்டம் தடைசெய்யப்பட்டது.
ஆனால், நிா்வாகத் திறனற்ற திமுக ஆட்சியில் ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் குறித்து பெயரளவில் மட்டும் நடவடிக்கைகள் எடுப்பது போன்று காட்டிவிட்டு, வலுவில்லாத சட்டத்தை இயற்றி, மறுபுறம் மக்களின் உயிரையே பணயம் வைக்கும் சூதாட்ட நிறுவனத்திடம் பணம் பெற்றிருப்பது வெட்கக்கேடானது.
மக்களின் உழைப்பைச் சுரண்டி உயிரைக் குடிக்கும் பாவப்பணத்தை பெற்றிருக்கும் திமுகவுக்கு, வரும் மக்களவைத் தோ்தலில் மக்கள் உரிய பாடம் புகட்டுவாா்கள் எனப் பதிவிட்டுள்ளாா் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...