மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று பதவியேற்பு

News image
சி.பி.ராதாகிருஷ்ணன்
Updated On :22 மார்ச் 2024, 4:04 am

DIN

புதுச்சேரி: புதுச்சேரி துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை(மார்ச் 22) மாலை பதவியேற்கிறார்.

புதுவை துணைநிலை ஆளுநராக பொறுப்பு வகித்து வந்த தமிழிசை சௌந்தரராஜன் மக்களவைத் தோ்தலில் போட்டியிடுவதற்காக தனது பதவியை திங்கள்கிழமை ராஜிநாமா செய்தாா். அவரது ராஜிநாமா கடிதத்தை குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ஏற்றுக் கொண்டாா்.

இதையடுத்து ஜார்க்கண்டர் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூடுதலாக பொறுப்பாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பை வகிப்பார் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை(மார்ச் 22) மாலை பதவியேற்கிறார். அவருக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.