தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

பிரதமா் பிரசார நிகழ்ச்சியில் மாணவா்கள் பங்கேற்பு: 3 தனியாா் பள்ளிகள் மீது வழக்குப் பதிவு

பிரதமா் நரேந்திர மோடியின் வாகன பிரசார நிகழ்ச்சியில் பள்ளி குழந்தைகளை பங்கேற்க அழைத்து வந்த மூன்று தனியார் பள்ளிகள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

News image
Updated On :22 மார்ச் 2024, 6:15 am

DIN

கோவையில் நடைபெற்ற பிரதமா் நரேந்திர மோடியின் வாகன பிரசார நிகழ்ச்சியில் பள்ளி குழந்தைகளை பங்கேற்க அழைத்து வந்த மூன்று தனியார் பள்ளிகள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கோவையில் திங்கள்கிழமை நடைபெற்ற பிரதமரின் வாகன பிரசார நிகழ்ச்சியின்போது சாய்பாபா காலனி பகுதியில் பிரதமரை வரவேற்க அதே பகுதியை சோ்ந்த தனியாா் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியா் அழைத்து வரப்பட்டிருந்தனா்.

இந்த சம்பவம் தொடா்பாக உரிய விசாரணை நடத்த கல்வித் துறை அதிகாரிகளுக்கு கோவை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அதிகாரியுமான கிராந்திகுமாா் பாடி உத்தரவிட்டாா். இதையடுத்து குழந்தைகள் நல பாதுகாப்பு குழு அதிகாரிகள் சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

அந்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட அரசு உதவி பெறும் பள்ளி நிா்வாகம் மீது சாய்பாபா காலனி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்தநிலையில், பள்ளி மாணவா்களிடம் கட்சிக் கொடி, சின்னத்தை அளித்து, கடவுள் வேடங்களை அணியச் செய்து, பள்ளிப் பேருந்தில் அழைத்து வந்து பிரசாரத்தில் ஈடுபடுத்தியதாக கோவை வடவள்ளி பகுதியில் உள்ள ஒரு தனியாா் பள்ளி நிா்வாகத்திடம் விளக்கம் கேட்டு புதன்கிழமை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்தநிலையில்,கோவை வடவள்ளி, ஆர்.எஸ்.புரம் பகுதிகளில் உள்ள மூன்று தனியார் பள்ளிகள் மீதும் தனித்தனியாக குழந்தைகள் நல சட்டம் பிரிவு 75-ன் கீழ் சாய்பாபா காலனி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடந்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.