
கூகுள் மேப்பை பார்த்து கேரளத்தில் இருந்து சேலம் நோக்கி வந்த கார், இன்று காலை சேலம் மகுடஞ்சாவடி அடுத்த கனககிரி பகுதியில் சர்வீஸ் சாலை அருகில் உள்ள ஏரிக்குள் விழுந்தது.
இந்த விபத்தில், அதிர்ஷ்டவசமாக காரை ஓட்டி வந்த ஓட்டுநர் உயிர் தப்பினார்.
இதனையடுத்து, தகவல் அறிந்த அந்த பகுதிக்கு வந்த படகு இயக்கம் தொழிலாளர்கள் மற்றும் கிரேன் உதவியுடன் கார் மீட்கப்பட்டது.
சமீப காலமாக பல பகுதிகளில் கூகுள் மேப் பார்த்து சென்ற வாகனங்கள் தொடர்ந்து விபத்துக்குள்ளாகும் சூழல் அரங்கேறி வருவது குறிப்பிடத்தக்கது .
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.