ராமநாதபுரத்தில் ஓபிஎஸ் பெயரில் 5 பேர் போட்டி!

ஓ.பன்னீர்செல்வம் பெயரில் மேலும் நான்கு பேர் சுயேச்சையாக தேர்தலில் போட்டியிடுவதால், ஓபிஎஸ்ஸுக்கு கிடைக்கும் வாக்குகள் சிதறும்.
ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம்

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடும் நிலையில், மேலும் நான்கு பன்னீர்செல்வம் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் சின்னம், கொடி உள்ளிட்டவை பயன்படுத்த ஓபிஎஸ்ஸுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், பாஜக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.

தனது ஆதரவாளர்களுடன் ராமநாதபுரம் மாவட்ட தேர்தல் அலுவலரை திங்கள்கிழமை சந்தித்து போட்டியிடுவதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

ஓ.பன்னீர்செல்வம்
ராகுல் காந்தி, கார்கே தமிழகம் வருகை!

இதற்கிடையே, ராமநாதபுரம் மாவட்டம் மேக்கிழார்பட்டி கிராமத்தை சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் என்பவரும் நேற்று சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

தெற்குகாட்டூர் கிராமத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் என்ற பெயர் கொண்ட மற்றொருவரும் இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இவர் தந்தையின் பெயர் ஒய்யாரம்.

மேலும், இரண்டு ஓ.பன்னீர்செல்வம் இன்று வேட்புமனு செய்துள்ளனர். இதுவரை 5 பேர் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் ராமநாதபுரத்தில் போட்டியிட விண்ணப்பித்துள்ளனர்.

ராமநாதபுரம் தொகுதியில் பன்னீர்செல்வம் என்ற பெயரில் 5 பேர் சுயேச்சையாக களம் காண்பதால், ஓபிஎஸ்ஸுக்கு கிடைக்கும் வாக்குகள் சிதறும் நிலை ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com